தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில்!!!

தென் கலிபோர்னியா தமிழ் பள்ளியின் 8ம் ஆண்டுவிழா நிகழ்வின் ஒரு தொகுப்பு இவ்வருட பள்ளி ஆண்டு விழாவிற்கு, ஒரு புதிய துவக்கமாக, பெற்றோர்கள் அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் கலந்து கொள்ள அழைக்கும் போதே, அமைப்பாளர்களுக்கு இவ்விழாவின் பிரம்மாண்டம் தெரிய துவங்கியது. இவ்விழாவின் மனம் திறந்த அழைப்பு, தென் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஒரு இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது வரலாறு. தோராயமாக 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 60 ஆசிரியர்கள், 300 மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் என 800 பேரால் நிறைந்திருந்தது விழா அரங்கம். நமது தன்னார்வலர்களின், ஆசிரியர்களின் கைவண்ணத்தில் மற்றுமொரு குதூகலமான விழா. ஆறு மணித்தியாலங்கள் நீண்ட இவ்விழாவில் ஒவ்வொரு மணித்துளியும் விழாவின் உச்சக்கட்டமே! அவையில் இருந்த அத்துணை குழந்தைகளும் மேடை ஏறி தமிழ்தாய் வாழ்த்திசைத்து, குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட விழா, குழந்தைகளின் பரிசளிப்பு தொடங்கியவுடன் வேகமெடுத்தது. சென்ற வருடம் போலவே இவ்வருடமும், பல்வேறுபட்ட போட்டிகளில் 215 பரிசுகளை வென்று ஆச்சரியபடுத்தினார்கள் நம் மாணவர்கள். சென்ற வருடம் 100...