Posts

Showing posts from April, 2019

பனுவல் நூலகம் - ஓர் அறிமுகம்

Image
ஏறத்தாழ 6 வருடங்களுக்கு முன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய தாய்மொழி நாள் கட்டுரை (http://amuttu.net/viewArticle/getArticle/253) இப்படித்தான் ஆரம்பிக்கிறது.  - "சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது." அதே கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் - "அந்தமான் மூதாட்டியின் மொழிக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏற்படக்கூடாது. நாம் தான் அதைச் செய்யவேண்டும். இன்னொரு மொழிக்காரர் வந்து நமக்காக அதை செய்யப்போவதில்லை." எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!! முத்துலிங்கத்தின் கட்டுரையால் தூண்டப்பட்டு, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த சில நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான், " பனுவல் " நூலகம். தமிழில் படிக்கவேண்டும் என்று நினைக்கும் எவருக்கும், தமிழ் புத்தகங்கள் கிடைக்க செய்வது

கலிபோர்னியா மாகாண அளவில், 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் பத்து பேரில் ஒருவன் தமிழன்

Image
9 வயசு தமிழ் பையனை, நீங்க குமான்ல பாத்து இருப்பீங்க, பாட்டு கிளாஸ்ல பாத்து இருப்பீங்க, டான்ஸ் கிளாஸ்ல பாத்து இருப்பீங்க, ஆனா ஓட்ட பந்தய மைதானத்துல பாத்து இருக்கீங்களா, மாவட்ட அளவுல முதல்ல வந்து பாத்து இருக்கீங்களா. நம்ம தமிழ் பையன், ஊரளவுல மட்டும் இல்ல, மாவட்ட அளவுல மட்டும் இல்ல, மாநில அளவுல முதல் பத்து இடத்துல வந்து இருக்காங்க. கார்த்திகேயன் மற்றும் சுஜாதா தம்பதியினர், நம்மை போல் சாதாரண பின்னணி கொண்ட தமிழ் குடும்பம். கவின் அவர்களது முதல் குழந்தை. 2017 மார்ச் மாதம், கவினுக்கு அன்றைய தினம் அவனது 4ம் வகுப்பு PE கிளாஸ், வழக்கம் போல்தான் இருந்தது, PE ஆசிரியர் புதியவராக இருந்த போதிலும். கவினுக்கு தெரியாது, அந்த புதிய ஆசிரியர், அவனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றப்போகிறார் என்று. புதிய ஆசிரியர் வந்து சில நாட்களில், அவர் கவினின்  பெற்றோரிடம், கவினை தினமும் பள்ளி முடிந்தபின் ஒரு மணி நேரம் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு அனுப்புப்பும் படி ஆலோசனை சொன்னார். கார்த்திகேயனுக்கும், சுஜாதாவிற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லாதலாலும், கவினுக்கு அந்த அழைப்பு பிடித்திருந்ததாலும், கவின் அன்றிலிருந்து தினம

தென் கலிஃபோர்னியாவில் ஒலிக்கும் தேமதுரத் தமிழோசை!

Image
அன்றே சொன்னான் முண்டாசுக்கவி பாரதி, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். அவன் கண்ட அந்த கனவை, அவன் ஏற்றிய அந்த நெருப்பை, நாம் நம் குழந்தைகளின் நெஞ்சில் விதைப்பதை விட என்ன பெரிதாய் செய்துவிடமுடியும். தென் கலிஃபோர்னியா தமிழ் சங்கத்தின் அப்படியான நாற்றங்கால் விதைப்பை பற்றிய சிறிய பதிவு. 7 வருடங்களுக்கு முன், தென் கலிஃபோர்னியா தமிழ் சங்கத்தால் தொடங்கப்பட்ட தமிழ் கல்வி, தற்பொழுது மூன்று ஊர்களில் (Irvine, Brea & Eastvale) கலிபோர்னியா தமிழ் அகாடமியின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டு வருகிறது. வெறும் பத்து குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் கல்வி, மூன்று இடங்களில் கிளை பரப்பி, இந்த 2017-18 கல்வியாண்டில் மட்டும், மொத்தம் 254 குழந்தைகளுக்கு தமிழ் கல்வி பயிற்றுவித்துள்ளது.  முத்தாய்ப்பாக, ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற தமிழ் கல்வியின் ஆண்டு நாள் கொண்டாட்டத்தின், ஒரு பகுதியாக 3 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இது மாபெரும் வரலாற்றின் தொடக்கப்புள்ளி, தென் கலிஃபோர்னியா மாகாணத்தின் தமிழ் வரலாற்றில் ஒரு மைல் கல். ஒவ்வொரு ஆண்டும், தமிழ் கல்வியின் சார்பாக பல