Posts

Showing posts from October, 2019

படித்ததில் புரிந்தது - 1

வெற்றியடைந்தவனின் அத்துமீறல் சகித்துக்கொள்ளப்படுகிறது      நான் மட்டுமே நான் . வேறெதுவும் அற்றவன் நான் .      சில முடிவுகள் , மனிதர்களை அதன்பின் பேச விடுவதில்லை .      எத்தனை அலங்காரப்படுத்தப்பட்டாலும் அசல்வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அனாதை தான்      ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இருக்கும் போது , எதுவுமே நம் கவனத்தை குலைப்பதில்லை . “ வாழ்வதென்பது நம்பிக்கையின்பாற்பட்டது , என் அன்பே , வாழ்வதென்பது ஒரு தீவிர வணிகம் , உன்னை நேசிப்பதைப் போல ” - Vikatan சரஸ்வதிகடாட்சம்னா என்ன ? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும் . அதான் அவளோட விதி … - ஜெயமோகன்  நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும் , இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் நிழல்கூட உங்களைவிட்டு அகன்றிருக்கும் . - மதுபால் ஒரு பெருங்கடலை கால் நனையாமல் கடக்க முடியலாம் . ஆனால் , ஒருமுறைகூட   கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது . - மதுபா