Posts

Showing posts from 2020

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்

எத்தனையோவித நிலங்கள், எத்தனையோவித  நீர்நிலைகள், எத்தனையோவித காலநிலைகள், எத்தனை பூக்கள், எத்தனை காய்கள், எத்தனை விதமான உயிர்கள், எத்தனையோவித உணவுகள், உடைகள், எத்தனையோவித கலைகள், கலாச்சாரங்கள் அத்தனையும் அனைவருக்குமானவை. வேறுபாடு என்பது வெறுப்பை விதைக்க அல்ல, அணைத்து அரவணைத்து, அள்ளிப்பருக. ஒவ்வொரு நாளும் இயற்கை நமக்கு உணர்த்துவது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது. ஆஸ்திரேலிய ஊழித்தீயின் போது, சென்னை வெள்ளத்தின் போது, பல நூற்றாண்டு கால பட்டினி சாவுகளின் போது, கொரோனாவின் போது, நம்மால் என்ன செய்ய முடிந்தது, ஓடி ஒளிவது அன்றி! எவ்வளவு அவமானம்! எவ்வளவு வேதனை!! பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சியின் பின்னும், வேற்று கிரகத்திற்கு சக மனிதனை அனுப்பும் அளவு அறிவியல் வளர்ந்த பின்னும், நம்மால் இப்பேரழிவுகளை தடுக்கவோ, தாண்டவோ முடியாத போது, எங்கிருந்து வருகிறது எரிச்சல்? எங்கிருந்து வருகிறது இந்த குரோதம்? எங்கிருந்து முளைக்கிறது இந்த விரோதம்? எப்படி யானை என்ற பேருயிர்க்கு ஒரு சக மனிதனால் வெடிமருந்து வைத்த உணவை கொடுக்க முடிகிறது! ஒரு சில மனிதர்களால் ஆதரவற்ற எளிய மனித

சீரற்ற சிந்தனைகள் - 1

எதுவும் சிறிய துவக்கமே, நண்பர்களின் வலு மிகுந்த கைகள் பலம் சேர்க்கும் போது, நாம் பெரிதாய் வளர்வோம். இருத்தலின் அலைக்கழிப்பு. பிரியம் எனப்படுவது யாதெனில், எதோ ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப்படுதல். அளவுக்கு மீறிய அன்பெனும் நஞ்சு. நெஞ்சை அழுத்தும் விம்மலின் விசும்பல். பயம், அழுகை, மறதி, கோபம், சிரிப்பு, பொறாமை, வஞ்சம் போல அலட்சியமும் ஓர் ஆதார மனித பண்பு. நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் மிக விரும்பும் ஒரு நடிப்பைத்தான் இல்லையா? கருவறைவிட்டு வெளியே வரும்போதே பெண் தாயாகத்தான் வருகிறாள்

கொரோனா தொற்றும் - நம்மால் ஆனதும்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசாங்கம் மற்றும் நிர்வாகங்களின் யோசனையை ஏற்று அவரவர்தம் வீடுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும்  தென் கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் தமிழ் சங்கத்தின் வணக்கம். தமிழ் சங்கத்தின் தன்னார்வல தொண்டர்கள் கொரோனா தொற்று பற்றியும் அதனை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசித்து ஒப்புக்கொண்ட சில செயல் முறைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு. நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் வாழ்ந்து கொண்டிருந்தால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொரோனா தொற்று பரவ உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள். நம்மால் தனித்து இருப்பதன் மூலம் (சமூக கூட்டங்களை தவிர்ப்பதின் மூலம்) தொற்று பரவாமல் தடுக்க முடியும் அதற்கும் மேலாக ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் பாதிப்பை குறைக்க மற்றும் தவிர்க்க முடியும். உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், அனைவரின் நலனுக்காக பிரார்த்தியுங்கள். கூடுமானவரை பதட்டத்தை தவிர்த்து சரியான வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். WhatsApp வதந்திகளை நம்பாதீர்கள் மற்றும்

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி

கடந்த சில நாட்களாக உங்கள் அனைவராலும் கொரோனா தொற்று மற்றும் அதனின் விளைவுகள் பற்றி,  திகட்ட திகட்ட தகவல் திரட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் விருப்பத்திற்கு மாறாக மேலதிக தகவல்கள் உங்கள் காதுகளில், கண்களில் திணிக்கப்பட்டிருக்கும். ஆம் நாம் தகவல் திணிப்பு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பாதகங்களை பேசிக்கொண்டும், தகவல் திணிப்பில் நம்மை ஒப்புக்கொண்டும், அதே தகவல்களை நாம் பிறர் மேல் திணித்துக்கொண்டும். இந்த கட்டுரையில் நான் எந்த வித தகவல்களையும் உபயோகிக்க போவதில்லை. இது முழுக்க முழுக்க என்னால் உணரப்பட்டது, எனக்கு புலப்பட்ட உணர்வை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியே இதனை எழுதுகிறேன். மனிதனெனும் சுயநல அரக்கன், இப்புவிக்கும் அதன் பிற உயிர்களுக்கும் செய்த, செய்து கொண்டிருக்கும் இன்னல்களை பொறுக்க மாட்டாமல், இயற்கை அன்னை அளிக்கும் எச்சரிக்கை இந்த கொரோனா என்னும் தொற்று. இதனால் பலருக்கும் பல இன்னல்கள் ஏற்படும் போதிலும், நாம் உணரும் ஓர் உண்மை என்பது, பல விஷயங்கள் நாம் செய்யவேண்டியது இல்லை என்பதே. அத்தியாவசிய பொருட்களுக்கும், வேலைகளுக்கும் எந்த ஒரு முக்கியத்துவமும் கொ