Posts

Showing posts from June, 2020

’சானெட் ரானெம்’ - உன்னுடைய வலியை நான் எடுத்துக்கொள்கிறேன்

எத்தனையோவித நிலங்கள், எத்தனையோவித  நீர்நிலைகள், எத்தனையோவித காலநிலைகள், எத்தனை பூக்கள், எத்தனை காய்கள், எத்தனை விதமான உயிர்கள், எத்தனையோவித உணவுகள், உடைகள், எத்தனையோவித கலைகள், கலாச்சாரங்கள் அத்தனையும் அனைவருக்குமானவை. வேறுபாடு என்பது வெறுப்பை விதைக்க அல்ல, அணைத்து அரவணைத்து, அள்ளிப்பருக. ஒவ்வொரு நாளும் இயற்கை நமக்கு உணர்த்துவது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது. ஆஸ்திரேலிய ஊழித்தீயின் போது, சென்னை வெள்ளத்தின் போது, பல நூற்றாண்டு கால பட்டினி சாவுகளின் போது, கொரோனாவின் போது, நம்மால் என்ன செய்ய முடிந்தது, ஓடி ஒளிவது அன்றி! எவ்வளவு அவமானம்! எவ்வளவு வேதனை!! பல்லாயிரம் ஆண்டு கால பரிணாம வளர்ச்சியின் பின்னும், வேற்று கிரகத்திற்கு சக மனிதனை அனுப்பும் அளவு அறிவியல் வளர்ந்த பின்னும், நம்மால் இப்பேரழிவுகளை தடுக்கவோ, தாண்டவோ முடியாத போது, எங்கிருந்து வருகிறது எரிச்சல்? எங்கிருந்து வருகிறது இந்த குரோதம்? எங்கிருந்து முளைக்கிறது இந்த விரோதம்? எப்படி யானை என்ற பேருயிர்க்கு ஒரு சக மனிதனால் வெடிமருந்து வைத்த உணவை கொடுக்க முடிகிறது! ஒரு சில மனிதர்களால் ஆதரவற்ற எளிய மனித