படித்ததில் புரிந்தது - 1




வெற்றியடைந்தவனின் அத்துமீறல் சகித்துக்கொள்ளப்படுகிறது     

நான் மட்டுமே நான். வேறெதுவும் அற்றவன் நான்.    

சில முடிவுகள், மனிதர்களை அதன்பின் பேச விடுவதில்லை.    

எத்தனை அலங்காரப்படுத்தப்பட்டாலும் அசல்வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு அனாதை தான்     


ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இருக்கும் போது, எதுவுமே நம் கவனத்தை குலைப்பதில்லை.

வாழ்வதென்பது நம்பிக்கையின்பாற்பட்டது, என் அன்பே, வாழ்வதென்பது ஒரு தீவிர வணிகம், உன்னை நேசிப்பதைப் போல” - Vikatan

சரஸ்வதிகடாட்சம்னா என்ன? மனசிலே தீயிருந்தா அவ வந்து ஒக்காந்தாகணும். அதான் அவளோட விதி… - ஜெயமோகன் 

நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும்,இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் நிழல்கூட உங்களைவிட்டு அகன்றிருக்கும். - மதுபால்

ஒரு பெருங்கடலை கால் நனையாமல் கடக்க முடியலாம். ஆனால், ஒருமுறைகூட  கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது. - மதுபால்

வாழ்க்கையில் இரண்டு சந்தர்ப்பங்களில் மௌனமானவர்களாக வேண்டும். ஒன்று, ஒருவர் நீங்கள் சொல்வதைக்கேட்டும் உங்களை புரிந்துகொள்ளாதிருக்கும்போது. மற்றொன்று, அவர் ஒன்றும் சொல்லாமல் உங்களைக் கட்டித்தழுவிக் கொள்ளும்போது. - மதுபால்








Comments

Popular posts from this blog

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி