கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவுப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என் பெயரை பதிந்து கொள்ள சொன்னாள். மூன்று நாட்கள் இலக்கிய முகாமிற்கு போகிறேன் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்களுக்கு, உடன் பணிபுரிபவர்களுக்கு நான் ஒரு வினோத ஜந்து போல ஆகிப்போயிருந்தேன். நண்பர்களும், குடும்பத்தாரும் என்னை பீதியுடனும், வியப்புடனும், பொறாமையுடனும் பார்க்கத்தொடங்கிருந்தனர். காதலில் விழுந்த ஒருவனுக்கு உலகமே இனிப்பது போல், எனக்கு ஒவ்வொரு நாளும் இனித்து வழிந்தது. பதட்டத்தில் நான் விமான டிக்கெட்டை முதலில் சரியாக வாங்கி பின் சரிபார்க்கிறேன் பேர்வழி என்று ஒருநாள் தாமதமாக சார்லோட் விமானநிலையத்தில் இறங்குவதாக தவறாக மாற்றிவிட்டேன். வேங்கட பிரசாத் ( விபி) என்னை தொலைபேசியில் அழைத்து, என்னை அவரது வீட்டிற்க்கு வரவேற்ற போதுதான், என் விமான டிக்கெட் தவறானது என்றே எனக்கு புரிபட்டது. மீண்டும் அவசரமாக அதிக பணம் செலவழித்து சரியான நாளில் வட கரோலின...