Posts

Showing posts from June, 2024

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

Image
மறுவரை செய்யப்படவேண்டிய " வெற்றி " என்பதன் பொருள்  மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, துணைநிலை பணியாளர்களே, பெருமிதத்துடன் வந்திருக்கும் குடும்ப உறவுகளே, அதே அளவு பெருமிதத்துடன் வந்திருக்கும் நண்பர்களே, அனைத்திற்கும் மேலாக இங்கு குழுமியிருக்கும் என் சக (Woodbridge) மேல்நிலைப்பள்ளி பட்டதாரி மாணவர்களே! வருக! நாம் இத்தருணத்திற்கு வந்துவிட்டோம்! இன்றைய சமூகத்தில், சாதனைகளாக மதிக்கப்படுவது யாதெனில், பெற்ற மதிக்கத்தக்க பாராட்டுக்கள், பெறப்போகும் பட்டங்கள், அதிக ஊதியம் தரும் உத்தியோகம் அல்லது வரவேற்பறையில் இருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கைகள். எனினும் அதுவா வெற்றி என்பது உனக்கு?  நாம் அனைவரும், எதிர்காலத்தின் வாசலில் நின்றிருக்கும் இந்த வேளையில், ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையை பற்றிய தனித்துவமான கனவுகள், நம்பிக்கைகள்!! நான் ஆழமாக உங்கள் உவ்வொருவரையும் வலியுறுத்துவது என்னவென்றால் "நீங்கள் மனிதர்களாக வாழ பிறந்தவர்கள், மனித இயந்திரங்களாக மாறிவிட வேண்டியவர்கள் அல்ல". சட்டம், மருத்துவம், கட்டிட கலை, மற்றும் இன்ன பிற துறைகளில் நுழைய துடிக்கும் உங்களது குறிக்கோளை கைத்தட்டி பாராட்டும் நான்,...