மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள்

மறுவரை செய்யப்படவேண்டிய "வெற்றி" என்பதன் பொருள் 


மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, துணைநிலை பணியாளர்களே, பெருமிதத்துடன் வந்திருக்கும் குடும்ப உறவுகளே, அதே அளவு பெருமிதத்துடன் வந்திருக்கும் நண்பர்களே, அனைத்திற்கும் மேலாக இங்கு குழுமியிருக்கும் என் சக (Woodbridge) மேல்நிலைப்பள்ளி பட்டதாரி மாணவர்களே! வருக! நாம் இத்தருணத்திற்கு வந்துவிட்டோம்!




இன்றைய சமூகத்தில், சாதனைகளாக மதிக்கப்படுவது யாதெனில், பெற்ற மதிக்கத்தக்க பாராட்டுக்கள், பெறப்போகும் பட்டங்கள், அதிக ஊதியம் தரும் உத்தியோகம் அல்லது வரவேற்பறையில் இருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கைகள். எனினும் அதுவா வெற்றி என்பது உனக்கு? 

நாம் அனைவரும், எதிர்காலத்தின் வாசலில் நின்றிருக்கும் இந்த வேளையில், ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையை பற்றிய தனித்துவமான கனவுகள், நம்பிக்கைகள்!! நான் ஆழமாக உங்கள் உவ்வொருவரையும் வலியுறுத்துவது என்னவென்றால் "நீங்கள் மனிதர்களாக வாழ பிறந்தவர்கள், மனித இயந்திரங்களாக மாறிவிட வேண்டியவர்கள் அல்ல". சட்டம், மருத்துவம், கட்டிட கலை, மற்றும் இன்ன பிற துறைகளில் நுழைய துடிக்கும் உங்களது குறிக்கோளை கைத்தட்டி பாராட்டும் நான், அதே வேளையில், மிகவும் நம்புவது என்னவென்றால், இவ்விடத்தை விட்டு வீடு திரும்பும் போது, நாம் அனைவரும் "வெற்றி என்பதன் பொருளை வேறு நல்லவிதமாக புரிந்து கொண்டுவிடவேண்டும்". 


                                

வெற்றி என்பது வாங்கும் பதவி அல்ல, பதிக்க வேண்டிய முத்திரை அல்ல. வெற்றி என்பது, எப்படி நமது அடையாளத்தை, சாதனைகளில் இருந்து பாதுகாக்கிறோம் என்பது. மிக முக்கியமானது என்னவென்றால், நீ என்ன செய்யும் போதும், நீயாகவே இருக்க வேண்டும். பாதை அல்ல பண்பு தான் வெற்றியை தீர்மானிக்கும்! எனவே, உங்கள் அடையாளத்தை சரியான விதத்தில் வளர்த்தெடுங்கள். உங்கள் அடையாளத்தை கருணையுடன், எதிலும் மீண்டு வரக்கூடிய விதத்திலும், சமுதாய நோக்குடனும் தொடர்பு படுத்துங்கள். எந்த தொழிலோ, துறையோ: முழு உணர்வுடன், அர்ப்பணிப்புடன் ஈடுபடுங்கள். நம்மீதும், நம் பண்பாட்டின் மீதும், மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதிலும், எப்படிபட்ட சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்பதிலும் கவனம் செலுத்துங்கள், உடைமைகளின் பின் செல்லாதீர்கள். 

நிச்சயமற்ற எதிர்காலத்தில்: சில தருணங்களில், தவிர்க்க முடியாத தோல்விகள், துயரங்கள், கவலைகள் வரலாம். உங்கள் சாதனைகள், உயரங்கள் கேள்விக்கு உள்ளாக்க படலாம். அப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்து உள்ள விளையாட்டு வீரராகவோ, மதிப்பு மிக்க மாணவராகவோ இல்லாமல் போகலாம். 

நான் இந்த உயர்நிலை பள்ளிக்கு முதல் வருடம் வரும்போது, எனக்கு அணிந்து கொள்ள, மிக சரியான நண்பன், முதல் நிலை மாணவர், சிறகடிக்கும் வண்ணத்து பூச்சி போன்றவள் போன்ற பல பெருமைகள் இருந்தன. அப்போது என்னை கேட்டிருந்தால், நான் என்பது, எனது அடையாளம் என்பது அத்தகைய பெருமைகள் என்று சொல்லியிருக்கக்கூடும். 



உயர்நிலை பள்ளியின் மூன்றாவது வருடத்தில், நான் எடுத்து கொண்ட ஒரு பாடம் என்னை நானே மறுபரிசீலனை செய்ய தூண்டியது. என்னால் அவ்வளவு எளிதாக அப்பாடத்தை கடக்க முடியவில்லை, நான் நம்பிக்கை இழந்து விட்டேன், எனது மதிப்பெண்கள் சரிய தொடங்கின. என் நண்பர்கள் மீதான எனது கவனம் குறைய தொடங்கியது. என்னை பற்றிய அடையாளமாக, நான் சேர்த்து வைத்திருந்த மதிப்பீடுகள், பெருமைகள்  சரிய தொடங்கியது. உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இதுபோல் சந்தர்ப்பங்கள் வந்திருக்க கூடும் அல்லது வரக்கூடும். அது படிக்கும் பள்ளியிலோ, வேலையிலோ, நட்பிலோ, உறவிலோ  அல்லது வேறு எங்கோ நடந்திருக்க கூடும். அப்போது உங்களது மீதான மதிப்பீடுகள் மாறியிருக்க கூடும், நீங்கள் உடைந்து நொறுங்கியிருக்க கூடும். அப்படியான நேரங்களில், நம்மை, சுற்றி உள்ளவர்களை, சாதனைகளை வைத்து அளவிடாமல், மனித தன்மையை வைத்து அளவிட ஆரம்பிக்கும்போது,  நம்மை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். 

நீங்கள் உங்களது அடையாளத்தை, சுய மதிப்பை, உங்களின் சாதனையிலோ, பட்டத்திலோ, பெருமையிலோ வைத்துஇருந்தால் அப்படியான விஷயங்கள் உடைந்து போகும்போது, உங்களது சுயமும் உடைந்து போகும். இத்தருணத்தில் பட்டம் பெரும் 2024ம் ஆண்டின் மாணவர்களே (Woodbridge Warriors), நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், நமது அடையாளம் / சுயம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதில் இல்லை. நமது அடையாளம் அதை எப்படி செய்கிறோம் என்பதில் இருக்கிறது.



நான் உங்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் 
உங்கள் சக மனிதர்களை அவர்களின் தொழிலை வைத்தோ, அவர்களின் பாதையை வைத்தோ மதிப்பீடு செய்யாதீர்கள், மனிதர்களை அவர்களின் மனிதத்தை வைத்து மதிப்பீடு செய்யுங்கள். நம்மில் பலர் ஏற்கனவே பட்டங்களும், பதவிகளும் பெற்றிருந்தாலும், நமது பண்பு, மனிதத்தன்மை தான் நாம் என்ன செய்கிறோம் என்பதன் பொருளை தருகிறது. 

எனது சக, 2024 ஆண்டின் பட்டம் பெரும் மாணவர்களே, தனித்துவமான வண்ணமயமான வாழ்க்கை உங்கள் ஒவ்வொருவருக்கும் அமைய, நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் தனித்துவமான சாதனைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. 

- ஸ்ரீநிதி ஸ்ரீராம் 



Original speech on the podium




Comments

Post a Comment

Popular posts from this blog

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp