Posts

Showing posts from January, 2026

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - 3ம் சந்திப்பு

முன்னமே திட்டமிட்டபடி மூன்றாவது புக் கிளப் சந்திப்பு 2026 ஜனவரி 10 ம் தேதி அனுவின் டஸ்டின் வீட்டில் நடந்தது. இம்முறை 12 உறுப்பினர்கள் வந்திருந்தனர். சமோசாவும், காபியும், பப்பாளி பழமும் அனைவருக்கும் தயாராக இருந்தது.  எனக்கு வீட்டின் தோட்டத்தை சூரிய வெளிச்சத்திலேயே பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியதால் கேட்டு பார்த்தேன் ஆனால் சிவப்ரியா திட்டமிட்டபடி நாலு மணிக்கு நிகழ்வை தொடங்கி ஆகவேண்டும் என்று உடனடியாக என் யோசனையை மறுத்துவிட்டாள். தோட்டத்தில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பதாகவும், இருட்டில் பார்ப்பது இன்னமும் நன்றாக இருக்கும் என்றும் அனு சொன்னது மட்டும் அல்லாமல் எங்கள் எல்லோரையும் நிகழ்வுக்கு பிறகு அழைத்து சென்று சுற்றி காட்டினார்கள்.  புத்தாண்டு பிறந்ததிலிருந்து காளிராஜ் அவ்வப்போது எங்கள் அனைவருக்கும் நினைவுறுத்தி ஒவ்வொருவரையும் அவரவர் பேசப்போகும் கதைகளை தேர்ந்தெடுக்க வைத்து, அந்த கதைகளுக்கு சுட்டி அளித்து ஒருவராக எங்களை எல்லாம் தயார் படுத்தி இருந்தார். சுந்தரும் அவ்வப்போது வாலிபால் விளையாட்டுக்கு இடையே நான் கதைகளை படித்து விட்டேனா என்று கேட்டுகொண்டிருந்தார்.  வழக்கம் ப...