இலக்கிய பாலங்கள்: சுஜாதா - 3ம் சந்திப்பு - Jan 10, 2026
முன்னமே திட்டமிட்டபடி மூன்றாவது புக் கிளப் சந்திப்பு 2026 ஜனவரி 10 ம் தேதி அனுவின் டஸ்டின் வீட்டில் நடந்தது. இம்முறை 12 உறுப்பினர்கள் வந்திருந்தனர். சமோசாவும், காபியும், பப்பாளி பழமும் அனைவருக்கும் தயாராக இருந்தது.
எனக்கு வீட்டின் தோட்டத்தை சூரிய வெளிச்சத்திலேயே பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியதால் கேட்டு பார்த்தேன் ஆனால் சிவப்ரியா திட்டமிட்டபடி நாலு மணிக்கு நிகழ்வை தொடங்கி ஆகவேண்டும் என்று உடனடியாக என் யோசனையை மறுத்துவிட்டாள். தோட்டத்தில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பதாகவும், இருட்டில் பார்ப்பது இன்னமும் நன்றாக இருக்கும் என்றும் அனு சொன்னது மட்டும் அல்லாமல் எங்கள் எல்லோரையும் நிகழ்வுக்கு பிறகு அழைத்து சென்று சுற்றி காட்டினார்கள்.
புத்தாண்டு பிறந்ததிலிருந்து காளிராஜ் அவ்வப்போது எங்கள் அனைவருக்கும் நினைவுறுத்தி ஒவ்வொருவரையும் அவரவர் பேசப்போகும் கதைகளை தேர்ந்தெடுக்க வைத்து, அந்த கதைகளுக்கு சுட்டி அளித்து ஒருவராக எங்களை எல்லாம் தயார் படுத்தி இருந்தார். சுந்தரும் அவ்வப்போது வாலிபால் விளையாட்டுக்கு இடையே நான் கதைகளை படித்து விட்டேனா என்று கேட்டுகொண்டிருந்தார்.
வழக்கம் போல் காளிராஜ் இனிமையான குரலில் பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே பாடி நிகழ்வை தொடங்கினார், சுந்தரின் அறிவுறுத்தலால் நான் இதுவரை நடந்த இரண்டு கூடுகைகளை பற்றி மற்றும் நமது ரூல்ஸ் பற்றி சொன்னேன்.
சிவப்ரியா ஒவ்வொருவராக அவரவர் கதைகளை பேச அழைத்தார்.
1. அனு - குதிரை
2. கௌரி - நயாகரா
3. சாரதா - நகரம்
4. சிவப்ரியா - என் பேர் ஆண்டாள்
5. பிரியா காளி - அரிசி
6 ஸ்ரீலதா - ஜோதியும் ரமணியும்
எல்லா கதைகளும் சுஜாதாவின் வெவ்வேறு அம்சங்களைப் பேசினாலும், ஒரு விஷயம் மட்டும் காமன் — எல்லாரும் சுஜாதாவை ஒரு ஆசானாக, குருவாகவே பார்த்தோம். தமிழ் இலக்கியத்தில் நிறைய முக்கியமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. மாடர்ன் வியூ பாயிண்ட்டுகளை எளிமையாக எழுதியவர், டெக்னாலஜியை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தி எழுதியவர். இப்படி பல விஷயங்கள் சுஜாதாவைப் பற்றி பேசினோம்.
ஆனால் ஒரு முக்கியமான டிஸ்கஷன் அங்கே வந்தது. “ஏன் சுஜாதாவை நிறைய பேர் இலக்கியவாதி இல்லைன்னு சொல்றாங்க?”ன்னு கேள்வி எழுந்தது. அதைப் பற்றி பலரும் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டோம்.
நான் சொன்ன கருத்து இதுதான்: சுஜாதா எத்தனையோ பேரை இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தி எழுதியிருந்தாலும், அவர் மனித குலத்தின் அடிப்படையான உணர்வுகளை — ஆண் பெண் உறவு, கோபம், துரோகம், பண்பு, பாசம் போன்றவற்றை — ரொம்ப ஆழமா தொடவில்லை. அவரோட கதைகள் பெரும்பாலும் அந்தக் காலத்துக்கு ஒரு டெக்னிக்கல் விஷயத்தை எடுத்துக்கிட்டு, அதை சஸ்பென்ஸா, த்ரில்லரா, வார்த்தை விளையாட்டா எழுதியிருக்கும். ஆழமா மனித மனத்துக்குள் போகிற கதைகள் மிகவும் குறைவு. அவர் நிறைய எழுதி பாத்திருக்காரு. அப்ப கிடைச்ச ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வச்சோ இல்ல வார்த்தை விளையாட்டை வச்சோ அந்த நிமிஷத்துக்கான ஒரு விறுவிறுப்பு ஒரு இன்ட்ரஸ்டிங் எழுதிருக்காரே தவிர ரொம்ப டீப்பா எதுவும் எழுதல அப்படிங்கறத ஷேர் பண்ணோம்.
அதுக்கு எடுத்துக்காட்டா நகரம் கதையைச் சொன்னேன். அந்தக் கதையைப் பார்த்தா மட்டும் சுஜாதாவை இலக்கியவாதின்னு சொல்லலாம். ஏன்னா அந்தக் கதை ஒரு நகரத்தை — அதன் அமைப்பை, அதுல மனுஷங்க எப்படி உருண்டு போய்கிட்டே இருக்காங்கன்னு — ரொம்ப அழகா, ஆழமா சொல்கிறது. அதுல யாரும் வில்லன் இல்லை, எல்லாரும் உதவ நினைக்கிறாங்க, ஆனால் நகரத்தோட பரபரப்புல யாருக்கும் எதுவும் சரியா போய்ச் சேர்றதில்லை. அந்தக் கதை நம்மளை ரொம்ப ஆழமா யோசிக்க வைக்குது. அதுல வந்து உள்ள வரும்போது எல்லாருமே அதுல மோதி முட்டி மோதி கஷ்டப்பட்டு அதுக்கப்புறம் தான் சிஸ்டத்தை புரிஞ்சுக்க முடியும். அதை வந்து ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிடலோட பின்னணில அதை வந்து ரொம்ப அழகா எழுதிருப்பார். சுஜாதா. எனக்கு என் ஞாபகத்துல இருந்து சொல்றேன். அந்த கதையில யாருமே வில்லன்னு கிடையாது. எல்லாருமே எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ண தான் ட்ரை பண்ணுவாங்க. பட் அந்தந்த நேரத்து பரபரப்பு ஒருத்தருக்கு இன்னொருத்தர் பண்ற விஷயம் தெரியாதது, அவங்களுக்கான குறுகிய பார்வை அதை வச்சு எல்லாரும் பிஸியா எல்லாத்தையும் உருட்டி உருட்டி தள்ளிக்கிட்டே இருப்பாங்க. கடைசில யாருக்கு உதவி வேணுமோ அவங்களுக்கு உதவி கிடைக்காது. உதவி செய்ய வேண்டியவர் ரெடியா இருப்பாரு ஹெல்ப் பண்றதுக்கு அந்த டாக்டர். பட இது போய் சேராது.
இதை தான் வந்து ஒரு எக்ஸாம்பிளா எடுத்து ஏன் வந்து இது வந்து ஒரு இலக்கிய படைப்பு, மத்ததெல்லாம் ஒரு இலக்கிய படைப்பு இல்ல அப்படிங்கற பார்வையில நான் என்னோட கருத்துக்களை சொன்னேன்.
அப்ப நாங்க எல்லாரும் அடுத்த மாதம் சந்திக்கும்போது கீராவை நம்ம அடுத்த மாதத்துக்கான ஒரு ரைட்டரா எடுத்துக்கலாம் அப்படின்னு முடிவு பண்ணி, எங்களோட மூன்றாவது சந்திப்பை எண்ட் பண்ணிட்டு அவங்க அவங்க கிளம்பினோம்.
Comments
Post a Comment