பனுவல் நூலகம் - ஓர் அறிமுகம்
ஏறத்தாழ 6 வருடங்களுக்கு முன், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய தாய்மொழி நாள் கட்டுரை (http://amuttu.net/viewArticle/getArticle/253) இப்படித்தான் ஆரம்பிக்கிறது. - "சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது." அதே கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் - "அந்தமான் மூதாட்டியின் மொழிக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏற்படக்கூடாது. நாம் தான் அதைச் செய்யவேண்டும். இன்னொரு மொழிக்காரர் வந்து நமக்காக அதை செய்யப்போவதில்லை." எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!! முத்துலிங்கத்தின் கட்டுரையால் தூண்டப்பட்டு, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த சில நண்பர்கள் இணைந்து தொடங்கியது தான், " பனுவல் " நூலகம். தமிழில் படிக்கவேண்டும் என்று நினைக்கும் எவருக்கும், தமிழ் புத்தகங்கள் கிடைக்க செய்வது ...