கொரோனா தொற்றும் - நம்மால் ஆனதும்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, அரசாங்கம் மற்றும் நிர்வாகங்களின் யோசனையை ஏற்று அவரவர்தம் வீடுகளில் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும்  தென் கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் தமிழ் சங்கத்தின் வணக்கம்.

தமிழ் சங்கத்தின் தன்னார்வல தொண்டர்கள் கொரோனா தொற்று பற்றியும் அதனை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசித்து ஒப்புக்கொண்ட சில செயல் முறைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

நீங்கள் இன்னும் நண்பர்களுடன் வெளியில் சுற்றிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல் வாழ்ந்து கொண்டிருந்தால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ கொரோனா தொற்று பரவ உங்களை ஒப்பு கொடுக்கிறீர்கள்.

நம்மால் தனித்து இருப்பதன் மூலம் (சமூக கூட்டங்களை தவிர்ப்பதின் மூலம்) தொற்று பரவாமல் தடுக்க முடியும் அதற்கும் மேலாக ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் பாதிப்பை குறைக்க மற்றும் தவிர்க்க முடியும்.

உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், அனைவரின் நலனுக்காக பிரார்த்தியுங்கள்.
கூடுமானவரை பதட்டத்தை தவிர்த்து சரியான வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.
WhatsApp வதந்திகளை நம்பாதீர்கள் மற்றும் பரப்பாதீர்கள்.
வீடுகளில் தத்தம் குடும்பத்தாருடன் தனித்து இருங்கள்.
தேவையான அளவுக்கு மேல் எந்த வளங்களையும் வீணாக்காதீர்கள். எத்தனை நாட்கள் நாம் இப்படி தனித்து இருக்க வேண்டி இருக்கும் என்பது நமக்கு தெரியாது.

அத்தியாவசிய தேவைகளுக்கு அப்பாற்பட்டு வெளியில் செல்வதை கூடுமானவரை தவிருங்கள்.
அவசிய தேவைக்காக வெளியில் சென்று திரும்பினால், சுடு நீரில் குளியுங்கள் மற்றும் உடைகளை களைந்து துவைத்து போடுங்கள்
8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம்.
அடிக்கடி நீர் பருகுங்கள் அதையும் கொதிக்க வைத்து பருகுங்கள்.
பாரம்பரிய முறையில் உணவு சமைத்து உண்ணுங்கள். கூடுமானவரை மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து சமையுங்கள்.

எத்தனையோ ஆபத்துகளை தாண்டி வென்று வந்த மனித இனம் இந்த புதிய ஆபத்தையும் தாண்டி வென்று வரும். நம்மால் செய்யவேண்டியது எல்லாம் இந்த கடின காலத்தை அமைதியான முறையில் கடந்து செல்வதுதான்.

நாம் அனைவரும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் இந்த காலத்தை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

இலக்கியமும் நானும்