sirugathai
ரேயான் மீண்டும் என் வாயிலிருந்த லாலிபாப்பை பிடித்து இழுத்து குப்பை தொட்டியில் எறிந்தான். நான் அவனை துரத்த துவங்கினேன். என்னிடம் மேலும் 17 டிக்கெட்டுக்கள் இருந்தன. பத்து டாலர்கள் கொடுத்து ௨௦ டிக்கெட்டுக்கள் வாங்கியிருக்க தேவையில்லை, இப்போது மீதமுள்ள டிக்கெட்டுக்களை எந்த விளையாட்டில் குடுப்பது? நான் வசிக்கும் கம்யூனிட்டியில் இரண்டு நடுநிலை பள்ளிகளும், நான்கு ஆரம்ப பள்ளிகளும் இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஒரு உயர்நிலை பள்ளி தான். இந்த வருடம் முதல் முதலாக, உயர்நிலை பள்ளி மாணவர் அமைப்பு நடத்தும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. இங்கும் அங்குமாக மாணவர்கள் அமைத்து இருக்கும் விளையாட்டு போட்டிகளும், தின்பண்டங்களும் ஸ்டால்களில் இருந்தன. சில ஸ்டால்களில் கூவி கூவி அழைத்துக்கொண்டு இருந்தார்கள். எங்கள் கம்யூனிட்யில் உள்ள அணைத்து விதமான மக்களும் அங்கெ இருந்தார்கள். தமிழ் பேசும் என் பெற்றோரின் நண்பர்கள், என்னுடைய தமிழ் பள்ளி நண்பர்கள் அவ்வப்போது என்னை பார்த்து விசாரித்தார்கள். நான் என்னுடைய தங்கையுடனோ அல்லது பெற்றோருடனோ அங்கு போகவில்லை மாறாக என்னுடைய நண்பர்களுடன் போயிருந்தேன். இப்போதெல்லாம் எனக்கு துணை தேவைப்படுவதில்லை, அதுவும் இந்த திருவிழா என் வெற்றிக்கு
Comments
Post a Comment