இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு

 


November 23 காலை 10–12 மணி வரை கௌரி வீட்டில் VLC புக் கிளப் இரண்டாவது மீட்டிங் நடந்தது. பத்து பேர் வந்திருந்தோம் — 4 ஆண்கள், 6 பெண்கள்.

கார்த்திகேய ராஜாமணி முந்தைய மீட்டிங்கில் சொன்னபடி அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டோம். ஆறு பேர் தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளைப் பேசத் தயாராக வந்திருந்தார்கள்; நான் ஆசிரியர் பற்றி சுருக்கமான இன்ட்ரோ கொடுப்பேன் என்று சொல்லியிருந்தேன்.

வழக்கம் போல காளி வள்ளலார் பாட்டு ஒன்றைப் பாடி தொடங்கினார். பிறகு ஜெயமோகனின் இரண்டு ரூல்களை நினைவுபடுத்தினேன்: பேச்சு ஒன்றுடன் ஒன்று மோதக்கூடாது, எல்லாமே நேர எல்லைக்குள். இம்முறை 7 நிமிட ரூலையும் ட்ரை பண்ணினோம். சுந்தர் டைம் கீப் பண்றேன் என்றார்.

முத்துலிங்கம் இன்ட்ரோவுக்கு பே ஏரியா புக் கிளப் நண்பர்களின் நோட்ஸ் மிகவும் உதவியாக இருந்தது மற்றும் ஜெயமோகன்.இன் தளமும், சாரதி கொடுத்த மெட்டீரியல் எல்லாம் ரெஃபர் பண்ணினேன். பாதியில் சுந்தர் “ஏற்கனவே 9 நிமிடம் ஆகிடுச்சு”னு சொன்னதும் பதட்டமாகி ஒரு நிமிஷத்தில் முடிச்சிட்டேன். மீதியை பிறகு அவ்வப்போது சிறுகதை விவாதங்களுக்கு இடையில் சொன்னேன். என் தயாரிக்கப்பட்ட உரையை நான் ஆவணப்படுத்த வேண்டும்.

கதை விவாதங்கள்:

  • காளிராஜ் — “யானையின் சம்பளம்” 
  • சிவப்பிரியா — “அதிஷ்டம் என்பது ஒருவித திறமை”
  • அனு வினோத் - தொடக்கம் 
  • ஸ்ரீலதா - ஒரு மணி நேரம் முன்பு
  • ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு பிறகு கைவிடப்பட்ட "கல்வீட்டுக்காரி" கதையையும் விவாதிக்க முடிவு செய்து, விவாதித்தோம். 
  • கௌரி - ஒரு சாதம்
  • சாரதா - கடவுச்சொல் (சாரதாவால் வரமுடியாததால், அந்த கதையை விவாதிக்கலாமா என்ற கேள்விக்கு, இப்போது விட்டால் அக்கதையை மீண்டும் விவாதிக்க முடியாது மற்றும் அனைவரும் அந்த கதையை படித்து வந்திருக்கிறோம் என்பதால் விவாதிக்க எடுத்துக்கொண்டோம். நான் கதை சுருக்கத்தையும் அதன் மீதான என் பார்வையையும் சொன்னேன்.)

மெயின் செஷன் 12:10க்கு சரியாக முடிச்சோம் — கிட்டத்தட்ட 2 மணி நேரம்!

பிறகு இன்பார்மலா தொடர்ந்தோம். அடுத்த ஆசிரியர்/புத்தகத்தை ஒரு வாரம் முன்னாடியே சொல்லிடலாம்னு நான் ப்ரொபோஸ் பண்ணினேன் — எல்லாரும் ஓகே சொன்னாங்க. அடுத்தது எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒருமனதாக முடிவு செய்தோம். சுஜாதா பற்றியும் திடீர்னு ஒரு ஜாலியான டிஸ்கஷன் நடந்தது — அவரோட ஸ்டைல், பங்களிப்பு எல்லாம்.

டிசம்பர் மீட் கேன்சல் (ஹாலிடேஸ் அதிகம்). அடுத்தது ஜனவரி 9-10-11 வீக்கெண்ட் — அருண் வருவார்னு காளிராஜ் சொன்னதால் அவருக்கு வசதியான தேதி/நேரத்தை அவரே பிக் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினோம். அருண் ஃபேமிலியோடு என் வீட்டில் தங்கிக்கலாம்னு Anu ஆஃபர் பண்ணினார். — ட்ராவல் டயர்ட் ஆகாது.

சுந்தர் நிறைய போட்டோ எடுத்தார். வீடியோ ரெகார்டிங் வேண்டாம்னு மறுபடியும் முடிவு பண்ணினோம், ஆனா ஆடியோ ரெகார்டிங் ஆரம்பிக்கலாம்னு பேசினோம். கூடுமானவரை யாரென்றால் முடியுமோ அவர்கள் தொடர்ந்து இந்த சந்திப்புகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டோம்.



மொத்தத்துல ரொம்ப வெதுவெதுப்பான, ஃபோகஸ்ட் மீட்டிங். ஜனவரி பொங்கல் மீட்-க்காக வெய்ட் பண்ணுறோம்!

புக் கிளப் சந்திப்பிற்கு பிறகு நண்பர்கள் வாட்ஸாப்பில் அனுப்பிய குறுந்செய்திகள் இங்கே

Raj - நல்ல ஒரு உரையாடல் இன்று. எல்லோரும் கதைகளை வாசித்து வந்தபடியால், மிக இலகுவாக உரையாட முடிந்தது. மனதிற்கு மிக இதமாக இருந்தது. இப்படியே இதைத் தொடர்வோம். எல்லோருக்கும் இனிய விடுமுறைக் கொண்டாட்டங்கள் அமையட்டும். புது வருடத்தில் மீண்டும் சந்திப்போம்.

Sivapriya - உண்மை. இன்ற்ய கதை உரையாடல் மனதிற்கு மிக இதமாக அமைந்த்து. இது தொடரட்டும்.

Gowri - Wonderful session today 🙏. What a different, interesting and brilliant perspectives of you all on same stories.

நா முத்துக்குமார் சொல்வது போல் ஒரு புத்தகத்தை திறக்கிற போது ஒரு உலகம் திறந்து கொள்கிறது என்பது சரி . இன்றைய அமர்வில் ஒரே புத்தகம் பல உலகங்களை திறக்க செய்யும் என தெரிந்தது. 


I was amazed by Distinct viewpoint on ஒரு மணி நேரம் முன்பு.

Sundar - 









Comments

  1. Extremely humbled to be a part of this group. Listening to the perspectives and the discussions followed by the stories are even more heartwarming and thought provoking!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - முதல் சந்திப்பு