Posts

Showing posts from June, 2026

இலக்கிய பாலங்கள்: S RA - 8ம் சந்திப்பு - June 6, 2026

 Kaliraj sang pitchai paathiram (ramana Maharishi-Ilayaraja)

இலக்கிய பாலங்கள்: நியூயார்க் மாநகரில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கிய விழா

Image
        https://livingtamillitfest.org/ தென் கலிஃபோர்னியாவில் இருந்து அருண், மலர்விழி மணியம், காளிராஜ், பிரியா காளிராஜ், ஸ்ரீராம் காமேஸ்வரன் மற்றும் கல்லூரியில் படிக்கும் பாரதி காளிராஜ், ஸ்ரீநிதி ஸ்ரீராம் ஆகியோர் நியூயார்க் நகரில் நடக்கும் வாழும் தமிழ் விழாவிற்கு சென்றிருந்தோம்.  ஸ்ரீநிதி அவ்விழாவின் தொடக்க அமர்வை ஒருங்கிணைத்தார், பாரதி காளிராஜ் 2ம் நாளில் மாறும் "இந்தியா: உணவும் உணர்வும்" என்ற அமர்வை ஒருங்கிணைத்தார். இவ்விருவரும் நிகழ்வில் எழுத்தாளர்களின் உரைகளை ஒட்டி உடனுக்குடன் கேள்விகளை எழுப்பியும், எழுத்தாளர்களின் உரைகளை தொகுத்து சொல்லியும் பெரும்பாலோரின் பாராட்டுகளை பெற்றார்கள். இவ்விரு அமர்வுங்களின் பதிவு இங்கே:  தொடக்க அமர்வு:  இந்தியா: உணவும் உணர்வும் அமர்வு:  பாரதிக்கு நன்றி.   அவருக்காகத்தான் நான் அந்த அமர்வில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன் . நம் புத்தகக்குழுவின் அடுத்தடுத்த மாத வாசிப்புகளுக...

இலக்கிய பாலங்கள்: விவாதம் - வைரமுத்துவுக்கு ஞானபீடம்

இது சமயத்தில் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கிய உலகில் வையரமுத்து விருது விவகாரம் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எங்கள் புத்தகக்கூட்டத்தில் நடந்த விவாதங்களும் அதே திசையில் ஆழமான சிந்தனைகளை தூண்டின. கீழே அந்த கருத்துக்களின் தொகுப்பு. காளிராஜின் கருத்து   பல எழுத்தாளர்கள்—இடதோ வலதோ—இந்த விருதுக்கு எதிராக இருப்பது சுவாரஸ்யம். வையரமுத்துவின் படைப்புகளை இலக்கியக் கோணத்தில் ஆராய்ந்து, “ஏன் இது இலக்கியம் அல்ல?” என்று தெளிவாக விளக்கும் ஒரு நல்ல ஆய்வு எழுதப்படவேண்டும். அது இன்றும் இல்லை. அவரின் ஒழுக்கக்குறைப்பு சம்பவங்கள் தனி விஷயம்; ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அவரின் படைப்பை நிராகரிக்கக் கூடாது என்பதே என் நிலை. உதாரணமாக—கோனங்கி. அவருக்கு விருது கிடைத்தால் யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால் வையரமுத்துவின் படைப்புகள் இலக்கிய மதிப்பில்லாதவை என்பதில் எனக்கு சந்தேகமில்லை. சட்டரீதியாக, சின்மயி கூறியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் படைப்பை மதிப்பிடும்போது அதை தனியாகப் பார்க்க வேண்டும். ராஜின் கருத்து அவரின் விஷயத்தில...

இலக்கிய பாலங்கள்: சாம்ராஜ் - 7ம் சந்திப்பு - April 20, 2026

 “aayar paadi maalikaiyil “ Krishnan devotional 

ஜெயமோகன் மற்றும் குடும்பத்தின் தென் கலிஃபோர்னியா பயணம் — Living Tamil LitFest‑க்கு பிந்தைய சிறப்பு சந்திப்பு

Image
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது மனைவி அருண்மொழி நங்கை, அவர்களது மகள் சைதன்யா மற்றும் மகன் அஜிதன அவர் மனைவி தன்யாவும் April 11, 2026 தென் கலிஃபோர்னியாவுக்கு வந்திருந்தார்கள். அனைவருக்கும் இரவு உணவு சிவப்ரியா தயார் செய்திருந்தாள். அஜிதனும் தன்யாவும் எங்கள் இல்லத்திலேயே தங்கிவிட, மற்றவர்கள் காளிராஜ் வீட்டிற்கு சென்று தங்கினார்கள்.  புத்தக வாசிப்பு சங்க நண்பர்கள் அனைவருக்கும் காளிராஜ் வீட்டில் April 12, 2026 காலை உணவு தயாராக இருந்தது.  காலை உணவிற்கு பிறகு ஜெயமோகன் சார் அனைவரிடமும் சிறிது பேசிக்கொண்டிருந்தார். இன்றைய நாளின் பேசுபொருள் எப்படி செயற்கை நுண்ணறிவு மிகவும் அபாயகரமானது, எப்படி அது பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும் மனிதனால் சரியாக கையாளப்படாவிட்டால் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது எப்படி ஒரு இளம் வழக்கறிஞரை அத்தொழிலை விட்டு விலகச்செய்தது என்று சொன்னார். அந்த இளம் வழக்கறிஞர் செயற்கை நுண்ணறிவு கொடுத்த தகவல்களை சரிபார்க்காமல் அப்படியே நீதிபதிக்கு கொடுத்து அவரும் அதனை ஒத்துக்கொண்டு எதிர்தரப்பு அனுப்பி வைத்துவிட்டார். எதிர் தரப்பு வயதான வழக்கறிஞர் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்த...

இலக்கிய பாலங்கள்: எஸ் ரா - 6ம் சந்திப்பு - Apr 9th 2026 - 6-8pm

Image
நமது மார்ச் மாத கூட்டத்திற்கு பிறகு, ஏப்ரல் மாத கூட்டத்திற்கு முன்னாள் பல நிகழ்வுகள்.  வைரமுத்துவுக்கு ஞானபீடம் நியூயார்க் மாநகரில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கிய விழா --------------------------- இனி இன்றைய நாள் நிகழ்வு. ஏப்ரல் மாத கூடுகை அனு வீட்டில் நடந்தது. ஏப்ரல் மாத கூடுகைக்கு எங்களின் தெரிவு எஸ் ரா.  நமது புத்தக வாசிப்பு சங்கம் ஆரம்பித்ததில் இருந்து, இன்றைய நிகழ்வுக்கு தான் குறைந்த அளவு நண்பர்கள் வந்திருந்தனர். கற்பனை என்றாலும் – முருகன் பக்திப் பாடல் பாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் காளிராஜ். கடைசி சமயத்தில் கௌரியால் வரமுடியாது போனதால், அவரின் கதையான அப்பாவின் வருகை, அனுவால் பகிரப்பட்டது. காளிராஜ் அவரது ஊர்ப்பாசத்தால் எஸ் ராவை அறிமுகப்படுத்த மிகுந்த தயாரிப்புகளுடன் வந்திருந்தார். அவரது நீண்ட உரை அனைவருக்கும் உவப்பானதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் (அனு தயாரித்து வைத்திருந்த பலகாரங்களுக்கும், அனுவின் காபி டீ உபசரிப்புக்கும் இந்த நேர விரயத்தில் பங்குண்டு, ஆனால் காளிராஜ் அவர் எடுத்துக்கொண்ட நீண்ட அறிமுக உரையினால் நேரமாகிவிட்டதாக பின்னர் எங்களிடம் வருத்தப்பட்டார்),  ...

இலக்கிய பாலங்கள்: வெயில், தமிழ்ப் பிரபா - 5ம் சந்திப்பு - March 14th, 2026 5pm-7pm

Image
நம்ம புக் கிளப் காளிராஜ் வீட்டுல பெப்ரவரி மாதம் மீட் பண்ணும்போது, கீராவோட கதைகளை படிச்சு முடிச்ச உடனே, வெய்யில் , தமிழ்ப் பிரபா இவங்க ரெண்டு பேரையும் மார்ச் மீட்டிங்குக்கு எழுத்தாளர்களா பிக் பண்ணினோம் — ஏன்னா இரண்டு பேரும் தமிழ் லிட்டரரி ஃபெஸ்டிவலுக்கு வரப்போறாங்க. அவங்களை சதர்ன் கலிஃபோர்னியா வரை கூட்டிட்டு வரலாம்னு பிளான் பண்ணினோம். ஒரு எழுத்தாளரோட படைப்புலகை படித்துவிட்டு அதன் பிறகே அவர்களை நம்மளோட இலக்கிய கூட்டத்திற்கு கூட்டிட்டு வரணும்னு நினைச்சு, வெயில் கவிதைகளையும் தமிழ்ப் பிரபாவோட நாவலையும் நேரடியா அவங்ககிட்டயே கேட்டு PDF-ல வாங்கினோம். எல்லாரும் தனித்தனியா புக் வாங்கி செலவு பண்ண வேண்டாம்னு, அதே சமயம் எழுத்தாளருக்கு நேரடியா பயன் இருக்கும்னு இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். அவங்க ரெண்டு பேருமே பெரிய மனசு பண்ணி எங்களுக்கு எழுத்துக்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. எங்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயமா இருந்துச்சு. மார்ச் 14, 2026 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நம்ம புக் கிளப்பின் ஐந்தாவது மீட்டிங்கை ஸ்ரீலதாவின் வீட்டில் நடத்த முடிவு செய்தோம். அவர் எல்லாரையும் அன்புடன் இன்வைட் செய்திருந்தார்,...

இலக்கிய பாலங்கள்: கீ ரா - 4ம் சந்திப்பு - Feb 07, 2026; 5pm-7pm

Image
  நம்ம புத்தகக் குழுவில் இந்த தடவை கீரா கதைகள் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தபோது, அதற்கான முன் தயாரிப்பே ஒரு சிறிய திருவிழா மாதிரி இருந்தது. காளிராஜ் எல்லா கதைகளையும் அனுப்பி, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தோம். வழக்கம்போல இந்த தடவையும் ஐந்து–ஆறு கதைகள் பிக் பண்ணப்பட்டன. ஆசிரியர்களை அழைப்பது – ஒரு புதிய முயற்சி ஆஸ்டின் சௌந்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு புதிய ஐடியா வந்தது. லிட்ஃபெஸ்ட் வரிசையில் 40 எழுத்தாளர்களில் இருந்து, இருவர் அல்லது மூவர் தென் கலிஃபோர்னியாவுக்கு வர முடியுமா? அவர்களை நம்ம புத்தகக் குழுவில் சந்திக்க முடியுமா? இந்த யோசனை எல்லாருக்கும் ரொம்பவே பிடித்தது. முதலில் சந்திரா தங்கராஜ் , வெய்யில் , இசை — இந்த மூவரையும் பிக் பண்ணினோம். இசை என் தேர்வு. அவருடைய கவிதைகள் எனக்கு ரொம்ப பிடித்தவை. ஆனாலும் விசா பிரச்சனையால் அவர் வர முடியவில்லை. அதற்குப் பதிலாக இறுதியில் தமிழ் பிரபா மற்றும் வெயில் — இந்த இருவரையும் அழைக்கலாம் என்று முடிவு செய்தோம். அவர்களை அழைப்பதற்கான செலவுகளை குறைக்க, “நாம் எல்லாரும் கொஞ்சம் காசு போட்டு ஒரு ஃபண்ட் உருவாக...

இலக்கிய பாலங்கள்: சரவணகார்த்திகேயன் (CSK) - 9ம் சந்திப்பு - June 6, 2026

Image
இர்வைன் தமிழ் புக் கிளப்பின் ஒன்பதாவது மீட்டிங் இன்று, ஜூன் 7, 2026. மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு அமைதியான, ஆனால் உள்ளுக்குள் பெரும் அலைகளை எழுப்பிய இரண்டரை மணி நேரம்.  வாழும் தமிழ் இலக்கிய விழா தந்துவிட்ட பல நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று. எங்களூர் (இர்வின், தென் கலிபோர்னியா) பொண்ணு, பாரதி காளிராஜ் ஒருங்கிணைத்ததால் எந்தவித குழப்பமும் இன்றி சுந்தரராமசாமி அரங்கிற்கு இரண்டாம் நாள் நடந்த "இந்தியா: உணவும் உணர்வும்" அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கவைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன்.   ஜூன் மாத கூடுகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட எழுத்தாளர் CSK என்று அழைக்கப்படும் சரவணகார்த்திகேயன். ஆறு கதைகள், ஆறு வாசிப்பாளர்கள், பலவிதமான உணர்வுகள். அவரது ஆறு கதைகளை வாசித்து விவாதித்த அந்த சில மணி நேரங்கள் எங்களை எவ்வளவு ஆழமாக உள்மனத்துக்குள் இழுத்துச் சென்றன என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வாசிப்புகள் மனதைத் தொடும்; சில வாசிப்புகள் மனதைத் ...