story 1
யாரோ காலேஜ்ல தீக்குளிச்சிட்டான், அதனால காலேஜ் இன்னிக்கு கெடையாது எப்ப தெறப்பாங்கன்னு தெரியாது என்பதுதான் அன்றைய பேசுபொருள். 18 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அந்த காலேஜ்க்கு பெரிய ஸ்டுடென்ட்ஸ் கூட்டம் பாலக்கரை காய்கறி மார்க்கெட்டிலிருந்து எப்போதும் கிளம்பும். இன்னிக்கி செமஸ்டர் லீவு முடிஞ்சி, ஒரு மாசம் கழிச்சு புது செமஸ்டர் காலேஜ் பர்ஸ்ட் டே. ராமன் எப்போதும் போல கோபால் வீட்டுக்கு வரும்போதே அங்க ஏற்கனவே வந்துவிட்ட மாறன் தீக்குளிப்பு சம்பவத்தை சொல்லிக்கொண்டிருந்தான். ராமன் படிக்கறது ஈவினிங் காலேஜ், டே காலேஜ் பசங்க திரும்பி வந்து இந்தவிஷயத்தை அரைகொறையா சொல்லிட்டு போய்ட்டாங்க போல, மார்க்கெட்ல இருந்த பாலு சொல்லித்தான் மாறனுக்கு தெரியும். இப்ப என்ன செய்ய? படத்துக்கு போவோமா இல்ல கேரம் வெளயாடலாமான்னு பெரிய டிஸ்கஷன். கோபால் அம்மா சொன்னா, மொதனாலும் அதுவுமா ஏன்டா கட் அடிக்கிறீங்க, போயிட்டு வாங்கடா அப்படீன்னு. ராமன் சொன்னான் ஆமாண்டா, நம்மளும் எப்பத்தாண்டா தீக்குளிஞ்சவன பாக்கறது போய் பாப்போண்டா. சரின்னு பஸ் ஏறினார்கள் அந்த மூவரும்.
கும்பகோணத்தில இருந்து திருப்பனந்தாள் பஸ்ல போனா இருவது நிமிஷம் ஆகும். பாலம் ஏறி இறங்கி வலது புறம் திரும்பினா, மெட்ராஸ் மெயின் ரோடு. அதுல இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் போனா காளி பிராண்ட் பாத்திர பேக்டரி வரும். அதுவரைக்கும், எப்பவும் போல பஸ் ஸ்டெப்புல தான் ராமனும் கோபாலும் நின்னுக்கிட்டே இருந்தாங்க. உள்ள போன மாறன் கூப்புட்டான், டே உள்ள வாங்கடா சீட்டு காலியாதான் இருக்கு. சரின்னு உள்ள போய் சீட்டுல ஜன்னல் ஓரமா ஒக்காந்த ஒடனே கவனிச்சான் ராமன், அன்னிக்கு பஸ்ஸுல பெரிய கூட்டம் இல்ல, வந்த கொஞ்ச நஞ்ச பசங்களும் தீக்குளிச்ச கதையைத்தான் பேசிக்கிட்டு வந்தாங்க. யாருக்கும் என்ன நடந்துதின்னே தெரியாது. ஆனா, ஆளுக்கு ஒரு கதையை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆரம்பத்துல இருந்த அந்த குறுகுறுப்பு இப்ப ராமனுக்கு இல்ல. வெளியில ஜன்னல் ஓரமா வேடிக்க பாக்க ஆரம்பிச்சு இருந்தான்.
மொதவருசம் காலேஜ் முடிஞ்சதும் ஹாஸ்டெல்ல காலி பன்னிட்டு, இன்னும் மூணு பசங்களோட சேந்து ஒரு பம்புசெட்டு மாடில ரூம் எடுத்து தங்கியிருந்தான் ராமன். மாறனும், கோபாலும் ஒவ்வொருநாளும் பாலக்கரை பஸ் ஸ்டாப்புல பஸ் பிடிச்சு காலேஜ் வர்ற டேஸ்காலர்ஸ். யாரு ரூம் சாவி வெச்சிருப்பா, இப்ப நம்ம மொதல்ல போனா எங்க பெட்டியை வெய்க்கறது, பேசாம செல்வா வீட்டுக்கு போய் அம்மாவை பாத்து பெட்டியை வெச்சிட்டு அப்பறம் காலேஜ்க்கு போலாமா இல்ல மெயின் ரோடு பேக்கரிக்கு போய், கடை அண்ணன்கிட்ட பெட்டியை குடுத்துட்டு அப்படியே காலேஜ் போலாமா. ராமன் நீண்ட யோசனையில் இருந்தான்.
திருவைப்பாடி குளம் வந்தவொடனேதான் ராமனுக்கு அந்த கேள்வியை மத்தவங்ககிட்ட கேக்கலாம்னே தோணிச்சு. ராமன் அந்த கேள்வியை கேக்கும்போது, மாறன் சொன்னான், இல்லடா நம்ம ஹாஸ்டெல்லுக்கு போயிடுவோம், எப்படின்னாலும் நமக்கு எல்லா டீடைலும் தெரியல, ஹாஸ்டெல்ல பசங்க முன்னாடியே வந்துருப்பாங்க அங்க போனா எல்லா விசயமும் தெரியும். ராமனுக்கும் அது சரின்னு பட்டது. ஏன்னா, காலேஜ்ல தீக்குளிச்சதுனால எப்படியும் போலீஸ் நம்மள உள்ள விடமாட்டாங்க. ஹாஸ்டல் பசங்க எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பாங்க அதனால அங்கேயே போலாம், விசாரிச்சிட்டு இன்னும் பசங்கள சேத்துக்கிட்டு, உள்ளூர் பசங்களோடயும் சேந்து போனா எப்படியும் உள்ள போய் பாத்துடலாம். திருப்பனந்தாள் போய் இறங்கும்போது ஒரே களேபரமாவும் போலீஸ் கூட்டமாவும் இருக்குன்னு நினைச்சான் ராமன். ஆனா போய் இறங்கும் போது எப்போதும் போலவே கடைத்தெரு இருந்தது. ஒரு தீக்குளிப்பு சம்பவம் நடந்தமாதிரியே இல்ல. நேரா போய், பேக்கரி கடை அண்ணன்கிட்ட விசாரிச்சா அவருக்கு அப்படி ஒரே விஷயமே தெரியல, ஓ அதான் இன்னிக்கு காலேஜ் பசங்க பெருசா வரலையா நான் நெனச்சேன் நாளைக்குதான் மொதநாளுன்னு சொன்னாரு. ஹாஸ்டெலுக்கு போற வழியிலேயே தீக்குளிப்பு சம்பவம் காலேஜ்ல நடக்கவே இல்லன்னு பசங்க சொன்னாங்க, ராமனுக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்தது. செத்ததுதான் செத்தான் ஏன்டா அவன் நம்ம காலேஜ்ல சாகல? அவன் செத்ததுனால நமக்கு என்னடா பிரயோஜனம் அப்படின்னு ராமன் புலம்ப ஆரம்பிச்சான்.
ஹாஸ்டெல்லுக்கு போனா அங்க ஏற்கனவே பிரகாஷ் வந்திருந்தான், பம்புசெட்டு ரூம்ல ராமன்கூட தங்கி இருக்கற மூணு பேரில் அவனும் ஒருவன். அவன்கிட்டயும் ரூம் கீ இல்ல, ஆனா அவனுக்கு தீக்குளிப்பு விஷயம் எல்லாமே தெரிஞ்சு இருந்தது.
என்னடா எவனோ தீக்குளிச்சி நம்ம காலேஜ் பேர கொஞ்சநேரத்துக்கு பிரபல படுத்திட்டான்னு ராமன் சொன்னப்போ, பிரகாஷ் கேட்டான் உனக்கு யாருடா சொன்னா அந்தவிஷயத்தை, என்ன தெரியும்ன்னு நீ சொல்ற? ராமன் சொன்னான், யாரோ டே காலேஜ் ஸ்டுடென்ட் காலேஜ்ல தீக்குளிச்சிட்டான் அப்படின்னு தாண்டா மாறன் சொன்னான். ஆனா இங்க வந்தவொடனேதான் தீக்குளிச்சது காலேஜ்ல இல்ல அப்படின்னு பசங்க சொன்னாங்க. வேற எங்கடா நடந்துச்சு?
தீக்குளிச்சது புவனகிரி அப்படிங்கற ஊருல, தீக்குளிச்சது பாலா அதுவும் நம்மளோட ஆறு மாசமா பம்பு செட்டு மேல தங்கியிருந்த புவனை பாலா அப்படின்னு பிரகாஷ் சொல்ல சொல்ல அதுவரை ஒரு சம்பவமா, விளையாட்டா, கேலிக்குரிய ஒன்னா இருந்த விஷயம் அங்கிருந்த எல்லாருக்கும் ரொம்ப பதட்டத்துக்கு உரியதாவும், வலி தரக்கூடிய ஒன்னாவும் மாறிக்கிட்டு இருந்தது. அந்த அறையில சிரிச்சிகிட்டு இருந்த அத்தனை நண்பர்களும் அமைதியானார்கள், எப்படி அந்த இடத்துக்கு ஹாஸ்டெலில் இருந்த அத்தனை நண்பர்களும் வந்தார்கள் என்பது தெரியவில்லை. மாறன், கோபால், பிரகாஷ், ராமன் யாருமே பேசவில்லை. என்னடா நடந்துச்சு? எப்படா நடந்துச்சு? செத்துட்டானா? இப்ப போனா அவனை ஒருதடவை கடைசியா பாக்கலாமா? ஒவ்வொருத்தனும் ஏதோ கேட்டுக்கிட்டே இருந்தாங்க, யாரு யாரோ ஏது ஏதோ சொன்னாங்க. ஒரு யுகமே போனது.
யாரு சொன்னான்னு தெரியல, ஆனா என்ன சொன்னான்னா, நீங்க ஏன் புவனகிரி போக கூடாது? கேட்டதும் ராமன் துள்ளிகுதிச்சு எழுந்தான், காசுக்கு என்ன பண்றது
Comments
Post a Comment