இலக்கிய பாலங்கள்: சரவணகார்த்திகேயன் (CSK) - 9ம் சந்திப்பு - June 6, 2026
இர்வைன் தமிழ் புக் கிளப்பின் ஒன்பதாவது மீட்டிங் இன்று, ஜூன் 7, 2026. மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு அமைதியான, ஆனால் உள்ளுக்குள் பெரும் அலைகளை எழுப்பிய இரண்டரை மணி நேரம். வாழும் தமிழ் இலக்கிய விழா தந்துவிட்ட பல நல்ல விசயங்களில் இதுவும் ஒன்று. எங்களூர் (இர்வின், தென் கலிபோர்னியா) பொண்ணு, பாரதி காளிராஜ் ஒருங்கிணைத்ததால் எந்தவித குழப்பமும் இன்றி சுந்தரராமசாமி அரங்கிற்கு இரண்டாம் நாள் நடந்த "இந்தியா: உணவும் உணர்வும்" அரங்கிற்கு சென்று அமர்ந்தேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கவைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன். ஜூன் மாத கூடுகைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட எழுத்தாளர் CSK என்று அழைக்கப்படும் சரவணகார்த்திகேயன். ஆறு கதைகள், ஆறு வாசிப்பாளர்கள், பலவிதமான உணர்வுகள். அவரது ஆறு கதைகளை வாசித்து விவாதித்த அந்த சில மணி நேரங்கள் எங்களை எவ்வளவு ஆழமாக உள்மனத்துக்குள் இழுத்துச் சென்றன என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சில வாசிப்புகள் மனதைத் தொடும்; சில வாசிப்புகள் மனதைத் ...
Comments
Post a Comment