இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - 5ம் சந்திப்பு - March 14th, 2026 5pm-7pm

நம்ம புக் கிளப் காளிராஜ் வீட்டுல பெப்ரவரி மாதம் மீட் பண்ணும்போது, கீராவோட கதைகளை படிச்சு முடிச்ச உடனே, வெயில், தமிழ்ப் பிரபா இவங்க ரெண்டு பேரையும் மார்ச் மீட்டிங்குக்கு எழுத்தாளர்களா பிக் பண்ணினோம் — ஏன்னா இரண்டு பேரும் தமிழ் லிட்டரரி ஃபெஸ்டிவலுக்கு வரப்போறாங்க. அவங்களை சதர்ன் கலிஃபோர்னியா வரை கூட்டிட்டு வரலாம்னு பிளான் பண்ணினோம்.



ஒரு எழுத்தாளரோட படைப்புலகை படித்துவிட்டு அதன் பிறகே அவர்களை நம்மளோட இலக்கிய கூட்டத்திற்கு கூட்டிட்டு வரணும்னு நினைச்சு, வெயில் கவிதைகளையும் தமிழ்ப் பிரபாவோட நாவலையும் நேரடியா அவங்ககிட்டயே கேட்டு PDF-ல வாங்கினோம். எல்லாரும் தனித்தனியா புக் வாங்கி செலவு பண்ண வேண்டாம்னு, அதே சமயம் எழுத்தாளருக்கு நேரடியா பயன் இருக்கும்னு இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். அவங்க ரெண்டு பேருமே பெரிய மனசு பண்ணி எங்களுக்கு எழுத்துக்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. எங்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயமா இருந்துச்சு.

மார்ச் 14, 2026 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை, நம்ம புக் கிளப்பின் ஐந்தாவது மீட்டிங்கை ஸ்ரீலதாவின் வீட்டில் நடத்த முடிவு செய்தோம். அவர் எல்லாரையும் அன்புடன் இன்வைட் செய்திருந்தார், நாங்களும் அனைவரும் அவரது வீட்டிலேயே கூடினோம்.

மார்ச் மீட்டிங்குக்கு முன்னாடியே, வெயிலையும் தமிழ்ப் பிரபாவையும் சதர்ன் கலிபோர்னியா வரை கூட்டிட்டு வர்றதுக்கு நம்ம பிளான் இருந்துச்சு இல்லையா? ஆனா லிட்ஃபெஸ்ட் ஆர்கனைசர்ஸ் கேன்சல் பண்ணிட்டாங்க. அதனால நம்ம பிளான் நடக்காது போச்சுன்னு தெரிஞ்சுது.

அதைப் பத்தி நாங்க எல்லாருக்கும் முன்னாடியே ஷேர் பண்ணியிருந்தோம். மீட்டிங்குக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த ஏமாற்றத்தைப் பத்தியும், நம்ம பிளான் ஏன் கேன்சல் ஆச்சுன்னு பத்தியும் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசினோம்.

LitFest Organizer's message:

"விருந்தினர் பயணம் இப்போதைய சூழ்நிலையில் நம் விருந்தினர்களின் பாதுக்காப்புக் கருதி அவர்களது பயணம் செய்யும் விமானங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. ஆதலால், எந்த விருந்தினருடைய பயணமும் ஏப்ரல் - 6-ற்கு மேல் அதிகப்படுத்தப்படமாட்டாது. இதற்கு இங்கு எதிர் வினையாற்ற வேண்டாம். ராஜனோ / நானோ பிராந்தியப் பிரதிநிதிகளிடம் பேசிக்கொள்கிறோம். விழா ஏற்பாட்டாளர்களுக்கு இரு மடங்கு வேலை ஆகிவிட்டது. அழைத்துச் சொல்லும் வரை பொறுமையாக இருக்கவும்."

எங்களுக்கு இந்த மீட்டிங் ரொம்ப முக்கியமான மைல்கல்லா இருந்துச்சு. ஏன்னா நம்ம புக் கிளப் இதுவரைக்கும் சிறுகதைகளை மட்டும்தான் படிச்சிருந்தோம். இதுதான் முதல் தடவையா ஒரு நாவலையும், ஒரு கவிஞரோட கவிதைகளையும் தேர்ந்தெடுத்து படிச்சோம்.

முதல்ல தமிழ்ப் பிரபாவோட பேட்டை நாவலை எடுத்தோம். அந்த நாவல் ரொம்ப இன்டென்ஸா இருந்துச்சு. எல்லாருமே படிச்சு முடிச்சதும் ஒருத்தருக்கு ஒருத்தர் முன்னாடியே அதோட தாக்கத்தை ஷேர் பண்ணிட்டு இருந்தோம். நாவல் மிகவும் தீவிரமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருந்தது. கௌரி, “ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை, அதனால் பெருமாள் முருகனின் ஆளண்டாப்பட்சியை இணையாகப் படித்தேன்” என்று சொன்னார். நானும் படித்து முடித்ததும் “வேறொரு உலகம்” என்றே உணர்ந்தேன். முதல் அத்தியாயத்தின் கணமும், ஸ்லாங்கும் சற்று கடினமாக இருந்தாலும், அதைத் தாண்டியதும் படிப்பது சுலபமாகிவிட்டது.



ராஜ், “இதுதான் நம்ம முதல் நாவல். செய்து பார்ப்போம்” என்று எழுதியிருந்தார்.

மீட்டிங்குக்கு முன்பாகவே பலரும் படித்து முடித்து, தங்கள் எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருந்தோம். அந்த நாவலின் தீவிரம் நம்மை முன்கூட்டியே உலுக்கியது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.

Mar 1st 2026 டி.எஸ்.எலியட் நிகழ்வில் விவேக் தமிழ்பிரபாவின் பேட்டை நாவல் குறித்து பேசினார். அதன் வீடியோ காட்சி.

https://youtu.be/fbEK6Zno6Qc?si=vVPpZoJLWJtiTd1k

எப்போதும் போல காளிராஜ் பாடலுடன் ஆரம்பித்தார். அதன் பிறகு நான் அந்த நாவலைப் பத்தி ஒரு உரை கொடுத்தேன். அதுக்கப்புறம் எல்லாரும் தங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கிட்டாங்க.

இந்த உரையோட லிங்க் இங்க கொடுக்கறேன்.

https://youtu.be/1yM1k__7_0k?si=NrXzGGnhBq5Wuzlf

காளிராஜ் வெய்யிலின் கவிதை உலகை எங்களுக்கு அறிமுகபடுத்தினார். அவருக்கு இளையராஜா பாடல்களை ஒட்டி வெய்யில் எழுதிய கவிதைகளே ஒரு திறப்பாக அமைந்ததாக சொன்னார். நானும் என் பங்குக்கு பன்றிக்குட்டிகள் பற்றிய வெய்யிலின் கவிதை எப்படி ஒடுக்கப்பட்டவர்களை பற்றியும், இளம் தலைமுறைகள் அதனை எப்படி பார்க்கிறார்கள் என்றும் பேசினேன்.

வந்திருந்த அனைவரும் தமிழ் பிரபாவின் பேட்டை நாவல் முக்கியமான ஒரு படைப்பென்றும் அது பேசும் கதைக்களம் பேசப்படும் விதமும் ஒரு முக்கியமான படைப்பாக பேட்டை எனும் நாவலை மாற்றிவிடுகிறது என்றும் பேசினார்கள்.

வெய்யிலின் உலகத்தை திறந்து விட்ட காளிராஜுக்கு அனைவரும் நன்றி சொன்னார்கள். கவிதைகளை படிப்பது எங்கள் குழுமத்திற்கு புதியது என்றாலும், காளிராஜ் அதனை எடுத்துச்சொன்ன விதத்தில் பெரும்பாலானவர்களால் இக்கவிதைகளை ரசிக்க முடிந்தது.

காளிராஜ் வெய்யிலின் கவிதை உலகை பற்றி ஒரு நல்ல உரை எழுதியிருந்தார். அவ்வுரை ஜெயமோகனின் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

https://www.jeyamohan.in/230375/

காளிராஜின் உரையை நான் வெய்யிலிற்கு அனுப்பியதற்கு, கவிஞர் வெய்யில் பெருமாளின் பதில் இது.

மிக எளிமையாக, அதேசமயம் மிக நுட்பமாக வாசித்து அனுகப்பட்டிருக்கின்றன கவிதைகள். மகிழ்ச்சியாக இருக்கிறது சார். மிக்க நன்றியும் அன்பும். இப்படியான உரையாடலுக்கான ஒரு திட்டம் நடக்காமல் போனதில் வருத்தம்தான். - வெய்யில்.

அடுத்த அமர்வுக்கு எஸ் ராவை தேர்ந்தெடுத்தோம்.

மீட்டப்புக்குப் பிறகு உறுப்பினர்கள் பகிர்ந்த அனுபவங்கள்

Kaliraj

“இந்த வார இலக்கிய கூடுகைக்காக நான் இரண்டு வாக்குறுதிகள் தந்திருந்தேன். ஆனால் இரண்டில் ஒன்றை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது — அதனால் ஒரு சிறிய குற்ற உணர்வு.

இரண்டு வாக்குறுதிகளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன:

  • இரண்டையும் கடைசி நேரத்தில்தான் கொடுத்தேன்.

  • முதலில் வந்து அமர்ந்து விட்டு, ‘அட, வாக்குறுதி!’ என்று நினைத்து எழுந்து சென்று தேவையானதை எடுத்துவந்தேன்.

  • நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே ஏராளமான தடங்கல்கள்.

  • பிரியாவிடம் உதவி கேட்டிருந்தும், அவளுக்கானதை கூட நான் தானே செய்து முடித்தேன்.

இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தும், ஒன்றை மட்டுமே முடித்தேன். ஆனால் முடித்த அந்த ஒரு வாக்குறுதி எனக்கு மகிழ்ச்சியானது.

அவை என்ன வாக்குறுதிகள்?

ஒன்று — நவீனக் கவிதைகள் பற்றி ஒரு ‘நல்ல’ உரையாற்றுவது. மற்றொன்று — ஸ்ரீ வீட்டில் கொடுக்கப்பட்ட பில்டர் காபியை ப்ளாஸ்க்கோடு காலியாக்குவது!

இரண்டில் ஒன்றை மட்டுமே நிறைவேற்ற முடிந்ததை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது… நீங்கள்தான் சிக்கிக் கொண்டீர்கள்!”

Raj

“நல்ல கதைதான் போங்க! சிக்கிக் கொண்டால் இப்படி போட்டி சிங்கி அடிக்கிறீர்கள் போல!” 😂

பின்னர் அவர் மேலும் கூறினார்:

“வெயிலின் உலகத்தை நீங்கள் திறந்து விட்டீர்கள். வாசித்துப் பார்க்கிறேன்.”

Sri

“நீங்கள் முடித்த வாக்குறுதி எங்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான்.”

Chandrika

“ஆகா! டிஸ்கஷன் மட்டுமல்ல, இந்த பில்டர் காபியையும் மிஸ் பண்ணிட்டேன் போல!”

Sundar

“ஸ்ரீ, அருமையான ஹோஸ்டிங். கதை விவாதத்துக்கு ஐந்து ஸ்டார், காபி மற்றும் ஸ்நாக்ஸ்க்கு பத்து ஸ்டார்!” 😀

Kaliraj (மீண்டும்)

“உரை அவ்வளவு சிறப்பாகவா இருந்தது? 🤪 அருமையான உணவு ஸ்ரீ — மிக்க நன்றி!”


Comments

Popular posts from this blog

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு - Nov 23, 2025 - 10-12pm