இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - 4ம் சந்திப்பு - Feb 07, 2026; 5pm-7pm

 நம்ம புத்தகக் குழுவில் இந்த தடவை கீரா கதைகள் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தபோது, அதற்கான முன் தயாரிப்பே ஒரு சிறிய திருவிழா மாதிரி இருந்தது. காளிராஜ் எல்லா கதைகளையும் அனுப்பி, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த கதைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தோம். வழக்கம்போல இந்த தடவையும் ஐந்து–ஆறு கதைகள் பிக் பண்ணப்பட்டன.

ஆசிரியர்களை அழைப்பது – ஒரு புதிய முயற்சி

ஜெயமோகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு புதிய ஐடியா வந்தது. லிட்ஃபெஸ்ட் வரிசையில் 40 எழுத்தாளர்களில் இருந்து, இருவர் அல்லது மூவர் தென் கலிஃபோர்னியாவுக்கு வர முடியுமா? அவர்களை நம்ம புத்தகக் குழுவில் சந்திக்க முடியுமா?

இந்த யோசனை எல்லாருக்கும் ரொம்பவே பிடித்தது.

முதலில் சந்திரா தங்கராஜ், வெயில், இசை — இந்த மூவரையும் பிக் பண்ணினோம். இசை என் தேர்வு. அவருடைய கவிதைகள் எனக்கு ரொம்ப பிடித்தவை. ஆனாலும் விசா பிரச்சனையால் அவர் வர முடியவில்லை.

அதற்குப் பதிலாக தமிழ் பிரபா பற்றி பேசப்பட்டது. இறுதியில் தமிழ் பிரபா மற்றும் வெயில் — இந்த இருவரையும் அழைக்கலாம் என்று முடிவு செய்தோம்.

புத்தகக் குழுவின் ஒற்றுமை – ஒரு சிறிய ஃபண்ட்

அவர்களை அழைப்பதற்கான செலவுகளை குறைக்க, “நாம் எல்லாரும் கொஞ்சம் காசு போட்டு ஒரு ஃபண்ட் உருவாக்கலாமே?” என்று யாரோ சொன்னதும், அனைவரும் உடனே ஒத்துக்கொண்டார்கள்.

அந்த ஒற்றுமை, அந்த உற்சாகம் — நம்ம குழுவின் பலம்.

மார்ச் மாத ஆசிரியர்கள் – வெயிலும் தமிழ் பிரபாவும்

பிப்ரவரி மீட்டப்புக்கே முன்னாடியே, “மார்ச் மாதம் நம்ம மீட்டப்பில் இந்த இரு ஆசிரியர்களைப் பற்றி பேசலாம்” என்று முடிவு செய்திருந்தோம்.

அதற்காக நான் அவர்களைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அந்த ஆர்வம், அந்த எதிர்பார்ப்பு — எல்லாமே ரொம்ப பாசிட்டிவ்.

காலியின் வீட்டில் நடந்த பிப்ரவரி 7 மீட்டப்

இந்த தடவை மீட்டப் நடந்தது காளிராஜ் வீட்டில். நம்மில் பெரும்பாலானவர்கள் அங்கே முதல் தடவை போனோம். நான் முன்னாடியே போயிருந்தாலும், மற்றவர்களுக்கு அது ஒரு புதிய அனுபவம்.

அந்த வீட்டின் அமைதி, காளியின் அன்பான வரவேற்பு, கீரா கதைகளின் ஆழம் — அனைத்தும் சேர்ந்து அந்த மாலை ஒரு அழகான நினைவாக மாறியது.



1. Kali: கதவு

https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81/

2. Anu: நாற்காலி:

https://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/

3. Sriram: ஒரு காதல் கதை

https://www.sirukathaigal.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-5/

4. Gowri: கன்னிமை

https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/

5. Sri:“அசல்” 

https://www.sirukathaigal.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/






🌼 மீட்டப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துகள்

Sunar

“வடை, சுண்டல், கேசரி, டீ — கதைகளைவிட கூட இதையே நான் அதிகம் ரசித்தேன்! அருமையான ஸ்நாக்ஸ்.”

Raj

“கேட்க வேணும் என்று நினைத்தேன்… ஆனால் மறந்து விட்டது!

‘பெத்தண்ணா’ யார்? என்ன உறவு? நாற்காலி கதையில் வருகிறார்.”

பின்னர் அவர் மேலும் சேர்த்தது:

“ஆமாம், பெத்தண்ணாதான் மெதுவாக எழுந்து போய் சொல்லுவார்.

கீராவின் மொழி ஆளுமைதான் எனக்குப் பிடித்தது. மிகவும் செறிவான எழுத்து. நிறைய வார்த்தைப் பிரயோகங்கள். சொல்ல வேண்டியதை ஓரிரு சொற்களிலோ, ஓரிரு வசனங்களிலோ தெளிவாகச் சொல்லிவிடுவார்.

இன்று நல்ல உரையாடல். அனைவரின் பங்களிப்பும் அருமை.”

Gowri

“பெத்தண்ணா அந்த வீட்டின் மூத்த மகன். இரண்டாவது பையன்தான் கதை சொல்லி.

அந்தக் கதையின் முழு ‘ஃபீல்’ எனக்கு தாய்மாமனை சீண்டுவதாகத் தோன்றியது. இறுதியில் அவன் மாமனிடம் ‘எங்கே நாற்காலி?’ என்று கேட்கும் போது, மாமன் ஆழமாக அவனைப் பார்த்து சிரிப்பார். அவன் மற்றும் பெத்தண்ணா சேர்ந்து ஐடியா பண்ணி, மாமனிடம் நாற்காலியை வாங்கவைத்திருப்பார்கள். கடைசி வரியில் அவன் துள்ளிக்கொண்டு இதை பெத்தண்ணாவிடம் சொல்ல ஓடுவான்.”

Kaliraj

“‘பெத்த’ (pedha) என்ற சொல்லுக்கு தெலுங்கில் ‘பெரிய’ என்று பொருள். அதனால் ‘பெத்தண்ணா’ என்பது ‘பெரிய அண்ணன்’. அது பெயராக இருக்காது; உறவு சொல்லாகத்தான் இருக்கும்.”

பின்னர் அவர் மேலும் கூறினார்:

“தமிழிலும் அதேதான். ‘பெரியப்பா’ என்பது ‘பெரிய (huge) அப்பா’ அல்ல; ‘மூத்த’ என்ற அர்த்தமே.”

Anu

“Pedha என்பது மனிதர்களைப் பற்றி பேசும்போது ‘மூத்தவர்’ என்று பொருள். பொதுவாகவும் ‘பெரியது’ என்ற அர்த்தம் உண்டு.”

Chandrika

“நான் ஒரு நல்ல விவாதத்தை மிஸ் பண்ணிட்டேன்னு தோன்றுகிறது.

அந்தக் கதைகளில் ‘பாவா’, ‘பெத்தண்ணா’ மாதிரி நிறைய தெலுங்கு வார்த்தைகள் இருந்தது. கரிச்சல் பகுதி மொழியில் இவை இருக்காது என நினைக்கிறேன்.

‘முளகு வற்றல்’ என்ற வார்த்தை வந்தது — நாமெல்லாம் ‘மிளகாய் வற்றல்’ தான் அறிவோம். அது டைப்போவா?

டிஸ்கஷன் சம்மரிக்காக காத்திருக்கிறேன்.”

Sriram

“ஆம், இரண்டும் ஒரே பொருள். கீரா தெலுங்கு பின்னணியுடையவர், அதனால் சில தெலுங்கு வார்த்தைகள் இயல்பாக வரும்.”

Comments

Popular posts from this blog

கூடுதல் என்பது களிப்பு Boone Literary Camp

ஆண்டு தோறும் இலக்கிய யாத்திரை - எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன்

இலக்கிய பாலங்கள்: தென் கலிஃபோர்னியாவில் புத்தகக் கிளப் - இரண்டாம் சந்திப்பு - Nov 23, 2025 - 10-12pm