இலக்கிய பாலங்கள்: எஸ் ரா - 6ம் சந்திப்பு - Apr 9th 2026 - 6-8pm
நமது மார்ச் மாத கூட்டத்திற்கு பிறகு, ஏப்ரல் மாத கூட்டத்திற்கு முன்னாள் பல நிகழ்வுகள்.
நியூயார்க் மாநகரில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கிய விழா
இனி இன்றைய நாள் நிகழ்வு. ஏப்ரல் மாத கூடுகை அனு வீட்டில் நடந்தது. ஏப்ரல் மாத கூடுகைக்கு எங்களின் தெரிவு எஸ் ரா.
நமது புத்தக வாசிப்பு சங்கம் ஆரம்பித்ததில் இருந்து, இன்றைய நிகழ்வுக்கு தான் குறைந்த அளவு நண்பர்கள் வந்திருந்தனர். கற்பனை என்றாலும் – முருகன் பக்திப் பாடல் பாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் காளிராஜ். கடைசி சமயத்தில் கௌரியால் வரமுடியாது போனதால், அவரின் கதையான அப்பாவின் வருகை, அனுவால் பகிரப்பட்டது.
காளிராஜ் அவரது ஊர்ப்பாசத்தால் எஸ் ராவை அறிமுகப்படுத்த மிகுந்த தயாரிப்புகளுடன் வந்திருந்தார். அவரது நீண்ட உரை அனைவருக்கும் உவப்பானதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் (அனு தயாரித்து வைத்திருந்த பலகாரங்களுக்கும், அனுவின் காபி டீ உபசரிப்புக்கும் இந்த நேர விரயத்தில் பங்குண்டு, ஆனால் காளிராஜ் அவர் எடுத்துக்கொண்ட நீண்ட அறிமுக உரையினால் நேரமாகிவிட்டதாக பின்னர் எங்களிடம் வருத்தப்பட்டார்), இந்த கூடுகையில் எங்களால் எடுத்துக்கொண்ட அனைத்து கதைகளையும் பற்றி விவாதிக்க முடியவில்லை, நேரமின்மை காரணமாக. அத்தனை உறுப்பினர்களும் வரமுடியவில்லை என்பதாலும், எடுத்துக்கொண்ட சிறுகதைகளை எல்லாம் பேசமுடியவில்லை என்பதாலும் மீண்டும் எஸ் ரா அவரைகளையே அடுத்த மாதத்திற்க்கான எழுத்தாளராக முடிவு செய்தோம். கூடுகைக்கு பிறகு, இனி நேரத்தை கறாராக பின்பற்றவேண்டும். அவரவர் சொந்த கருத்துக்களை அவரவருக்கான நேரத்தில் மட்டுமே பேசவேண்டும் அன்றி ஒவ்வொருவரையும் குறுக்கிட்டு எல்லாரும் பேசும்போது, நேரம் விரயமாகிவிடுகிறது என்ற கருத்துக்களில் அனைவரும் உடன்பட்டோம்.
Gowri / Anu: அப்பாவின் வருகை
Priya Kali: முதல் காப்பி
Sriram: தாவரங்களின் உரையாடல்
Saradha: சொந்தக்குரல்
Sivapriya: தொடுவிரல்
Comments
Post a Comment