இலக்கிய பாலங்கள்: நியூயார்க் மாநகரில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கிய விழா

 

     https://livingtamillitfest.org/



தென் கலிஃபோர்னியாவில் இருந்து அருண், மலர்விழி மணியம், காளிராஜ், பிரியா காளிராஜ், ஸ்ரீராம் காமேஸ்வரன் மற்றும் கல்லூரியில் படிக்கும் பாரதி காளிராஜ், ஸ்ரீநிதி ஸ்ரீராம் ஆகியோர் நியூயார்க் நகரில் நடக்கும் வாழும் தமிழ் விழாவிற்கு சென்றிருந்தோம். 

ஸ்ரீநிதி அவ்விழாவின் தொடக்க அமர்வை ஒருங்கிணைத்தார், பாரதி காளிராஜ் 2ம் நாளில் மாறும் "இந்தியா: உணவும் உணர்வும்" என்ற அமர்வை ஒருங்கிணைத்தார். இவ்விருவரும் நிகழ்வில் எழுத்தாளர்களின் உரைகளை ஒட்டி உடனுக்குடன் கேள்விகளை எழுப்பியும், எழுத்தாளர்களின் உரைகளை தொகுத்து சொல்லியும் பெரும்பாலோரின் பாராட்டுகளை பெற்றார்கள்.


இவ்விரு அமர்வுங்களின் பதிவு இங்கே: 


தொடக்க அமர்வு: 


இந்தியா: உணவும் உணர்வும் அமர்வு: 


பாரதிக்கு நன்றி.  

அவருக்காகத்தான் நான் அந்த அமர்வில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே நான் முழுமையாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த இரண்டு முக்கிய எழுத்தாளர்களை கண்டுபிடித்தேன் — லட்சுமி சரவணகுமார் மற்றும் சரவணகார்த்திகேயன். நம் புத்தகக்குழுவின் அடுத்தடுத்த மாத வாசிப்புகளுக்கு இந்த இளம் எழுத்தாளர்களைத் தேர்வு செய்யலாம் என்று உங்களிடம் சொல்ல நினைத்தேன்.ஒரு மாதம் ஒரு பாரம்பரிய (legacy) எழுத்தாளர், அடுத்த மாதம் ஒரு நவீன (contemporary) எழுத்தாளர் — இவ்வாறு மாறி மாறி எடுத்துக்கொள்ளலாம்.

நம் புத்தக சங்கத்திற்க்காக தமிழ் பிரபா அவரது பேட்டை நாவல் 12 புத்தகங்களும், கோசலை 2 புத்தகங்களும் கொண்டு வந்திருந்தார், வெய்யில் பெருமாள் அவரது 6 கவிதை புத்தகங்களையும் இரு பிரதி கொண்டு வந்திருந்தார். அவ்விழாவில் வந்திருந்த அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலோர் தமிழ் பிரபாவின் பேட்டை நாவலை தேடினார்கள், பிரபாவிடமே கேட்டார்கள். அத்தனை பேரிடமும் என்னிடம் பேட்டை 12 புத்தகங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. நான் தென் கலிபோர்னியா நண்பர்களிடம் அனுமதி பெற்று 10 பேட்டை புத்தகங்களையும், ஒரு பிரதி வெய்யிலின் 6 புத்தகங்களையும் அங்கே விற்பனைக்காக கொடுத்துவிட்டேன். நிறைய நண்பர்கள் என்னிடம் அதற்க்காக நன்றி தெரிவித்தார்கள். நீங்கள் அப்போதே இந்த அளவு பேட்டை நாவலுக்கு வரவேற்பிருக்கும் என்று சொன்னபோதும் என்னால் இவ்வளவு புத்தகங்களை மட்டுமே கொண்டு வரமுடிந்தது என்று தமிழ் பிரபா திரும்ப திரும்ப வருத்தப்பட்டார்.




இரண்டாம் நாள் நிகழ்வில் கிடைத்த மத்திய உணவு இடைவேளையில் தமிழ் பிரபாவையும், வெய்யில் பெருமாளையும் தனியே அழைத்து, தென் கலிபோர்னியா புத்தக வாசிப்பு சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நமது மரியாதையை சிறிய அன்பளிப்பு வழியாக அவர்களுக்கு கையளித்தோம். அந்த நிகழ்வில், நமது புத்தக வாசிப்பு சங்கத்தின் நண்பர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தோம் என்றும், நிச்சயமாக நீங்கள் இருவரும் எப்போதாவது தென் கலிபோர்னியா வரவேண்டும் அப்போது உங்களை நாங்கள் லாஸ் வேகாஸ் அழைத்துச்செல்வோம் என்றும் உறுதியளித்தோம். 

அந்நிகழ்வில் நான் பேசிய சில மணித்துளிகள் 


அவர்கள் கூறியது என்னவென்றால் — நாம் அவர்களின் படைப்புகளை வாசித்து, அதைப் பற்றி நேரம் ஒதுக்கி விவாதித்ததே அவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டாக இருந்தது.  
நாம் வழங்கிய பணம் அவர்கள் எதிர்பார்த்ததே இல்லை; அது அவர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, நம் புத்தகக் குழுவிற்கு தங்களின் நன்றியைத் தெரிவிக்கச் சொல்லினர்.

காளிராஜ் சொன்னார்: நிறைவு விழாவில் மேடையில், சௌந்தர் SoCal VLC‑ஐ சிறப்பாக குறிப்பிட்டார்.

இடம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்காக மிக ஆரம்பத்திலேயே, முக்கியமான அளவில் நாங்கள் செய்த பங்களிப்பை அவர் பாராட்டினார். ஸ்ரீராம், இது முழுவதும் உங்கள் முயற்சியால்தான் சாத்தியமானது.எங்களை எல்லோரையும் ஒன்றாக இணைத்து, முன்னெடுத்து வந்ததற்கு மனமார்ந்த நன்றி.


இரண்டு நாள் விழா முடிந்ததும் அனைவருக்கும் கொண்டாட்ட மனநிலை. ஒவ்வொருவரும் ஆசானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 

Comments

Popular posts from this blog

இலக்கிய பாலங்கள்: சரவணகார்த்திகேயன் (CSK) - 9ம் சந்திப்பு - June 6, 2026

இலக்கிய பாலங்கள்: அ. முத்துலிங்கம் - 2nd சந்திப்பு - Nov 23, 2025

இலக்கிய பாலங்கள்: ஜெயமோகன் - 1st சந்திப்பு - Oct 24, 2025